31st October 2020 18:06:43 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 23 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சம்பிக ரணசிங்க அவர்கள் வியாழக்கிழமை (29) தனது கடமையை பொறுப்பேற்றார்.
அங்கு வருகை தந்த அவருக்கு கஜபா படையணி 6 பட்டாலியனில் 23 ஆவது படைப் பிரிவின் படையினர் இராணுவ முறைப்படி இராணுவ மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையை வழங்கினர்.
புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி தலைமையக வளாகத்தில் ஒரு மரக்கன்று ஒன்றினையும் நட்டார்,மேலும் அவர் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேஜர் ஜெனரல் சம்பிக ரணசிங்க, இந்த புதிய நியமனத்திற்கு முன் மின்னேரியாவில் உள்ள காலாட்படை பயிற்சி மையத்தின் (ஐ.டி.சி) தளபதியாக பணியாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் போது படைப்பிரிவு தளபதிகள், படைப் பிரிவின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Nike air jordan Sneakers | Air Jordan Release Dates Calendar