Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2020 06:00:11 Hours

397 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- நொப்கோ தெரிவிப்பு

இன்று (02) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 397 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கையிட்டுள்ளது.

கம்பஹாவின் ஹெனகமயில் இருந்து சனிக்கிழமை (31) மேலும் ஒரு கோவிட் -19 மரணம் பதிவாகியுள்ளது.

இன்று (02) காலை 6.00 மணி வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 7582 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 6541 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்று (02) காலை டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 03 பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 228 நபர்கள் இன்று (02) வீடு திரும்ப உள்ளனர்.அவர்களில், விவசாய பயிற்சி நிலையம் பல்லேகல தனிமைப்படுத்தல் மையம் 69,ஹோட்டல் கல்கிஸ்ஸை தனிமைப்படுத்தல் மையம் 01, ஹோட்டல் கோல்டி சேன்ட் தனிமைப்படுத்தல் மையம் 08, விடத்தப்பல்லை தனிமைப்படுத்தல் மையம் 132, மீரிகம தனிமைப்படுத்தல் மையம் 18 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.

அதேபோல் இன்று வரை மொத்தம் 61955 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (02) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் 4039 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 01 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 11087 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 523822 ஆகும்.

முழுமையாக சுகமடைந்த 506 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (02) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. latest Running Sneakers | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth