Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2020 10:46:05 Hours

தங்களது வீடுகளுக்கு திரும்பவுள்ள 718 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் –நொப்கோ தெரிவிப்பு

இன்று (01) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 239 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கையிட்டுள்ளது.

இன்று (01) காலை 6.00 மணி வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 7185 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 6144 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 19 பயணிகள் கொழுமபுக்கு வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 718 நபர்கள் இன்று (01) வீடு திரும்ப உள்ளனர்.அவர்களில், மீரிகம ஆசிரியர் பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 03, நிலாவல ஆசிரியர் பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 310, பிரண்டிக்ஸ் பூனானி தனிமைப்படுத்தல் மையம் 128, மட்டக்களப்பு ஆசியரியர் கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 93, குண்டசாலை தனிமைப்படுத்தல் மையம் 43, விடத்தபல்லை தனிமைப்படுத்தல் மையம் 141 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.

அதேபோல் இன்று காலை (01) வரை மொத்தம் 60890 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இன்று காலை (01) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 60 தனிமைப்படுத்தல் மையங்களில் 4990 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 31 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10510 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 512735 ஆகும்.

முழுமையாக சுகமடைந்த 117 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (01) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களும் ஏனைய 115 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. (முடிவு). jordan Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK