Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2020 07:10:51 Hours

படையினரால் கேரல கஞ்சா கைப்பற்றல்

இராணுவ புலனாய்வுத் துறையினரின் தகவலுக்கமைவாக, மன்னாரிலுள்ள 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரின் 542 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தின் படையினர் வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி மன்னாரிலுள்ள அலவக்க பிரதேசத்தில்தேடுதல் நடவடிக்கையின் போது 4 கிலொ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நாநான்தன் பகுதியில் இருந்து முருகன் பகுதிக்கு முச்சக்கர வண்டியில் கஞ்சாவினை கொண்டு செல்லும் வேளையில் படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தினர். குறித்த கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தைப் பெறுமதி ரூபா 1.2 மில்லியனுக்கும் மேலாகும். குறித்த கஞ்சாவுடனான சந்தேக நபர் முருகன் பொலிஸ் நிலையத்திடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை படையினர் போதைப்பொருள், மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் முழுமையான செயல்பாட்டிற்கு பின்னால் தங்கள் முழுமையான பங்களிப்பினை வழங்குகின்றன. கடந்த சில நாட்களில் மன்னார் மற்றும் பிற இடங்களிலிருந்து போதைப்பொருள், மஞ்சள் மற்றும் பிற பொருள்களை மீட்டனர். trace affiliate link | Ανδρικά Nike