31st October 2020 12:06:43 Hours
இலங்கை பீரங்கி படையணியின் 21 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்கள் வியாழக்கிழமை (29) பனாகொடையிலுள்ள படைத் தலைமையகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாகவும் சேவையாறுறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வின்போது உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவாக அப்படையணியில் உள்ள நினைவுத்தூபிக்கு அவர் மலர் மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் படைத் தளபதிக்கு இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் படைத் தளபதி தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னிலையில் சுருக்கமான மத நடைமுறைகள் மற்றும் சம்பிரதாய எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்ட பிறகு மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களின் உத்தியோகபூர்வ கடமை பொறுப்பேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. போது சங்க உறுப்பினர்கள் கட்டளை அதிகாரிகள், ஏனைய அதிகாரிகள் மற்றும் படைத் தலைமையக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் உணவக அறையில் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய அவர் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வு அனைத்து படையினருக்குமான மதிய உணவு மற்றும் தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவடைந்தது best Running shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp