Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2020 07:00:27 Hours

மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களுக்கு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வு

34 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றிவரும் இலங்கை பீரங்கி படையணியின் 20 வது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு அப்படையணியில் திங்களன்று (26) அவருக்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. பனாகொடையிலுள்ள படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அனைத்து படையினரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின்போது உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவாக அப்படையணியில் உள்ள நினைவுத்தூபிக்கு அவர் மலர் மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரினால் வளாகத்தில் ஒரு மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அனைத்து படையினருக்குமான மதிய உணவு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வு அதிகாரிகளின் உணவக அறையில் இடம்பெற்ற இரவு விருந்துபசாரத்துடன் நிறைவுபெற்றது. Sports News | Air Max