30th October 2020 07:45:51 Hours
இன்று (31) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 633 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கையிட்டுள்ளது.
இன்று (31) காலை வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 6946 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 5905 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று (31) காலை அபுதாபியில் இருந்து EY 264 விமானம் ஊடாக 06 பயணிகளும் டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 12 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 508 நபர்கள் இன்று (31) வீடு திரும்ப உள்ளனர்.அவர்களில், எஸ்எலஎன்எஸ் நிபுன பூஸ்ஸ 05, கபரதுவ பொலிஸ் கட்டிட தனிமைப்படுத்தல் மையம் 04, வஸ்கடுவை சிட்ரஸ் சோட்டல் தனிமைப்படுத்தல் மையம் 02,கொக்கல ரிசோட் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையம் 28,ஹோட்டல் ஈடன் காடன் தனிமைப்படுத்தல் மையம் 71, ஹோட்டல் ஜெட்விங் புளூ தனிமைப்படுத்தல் மையம் 02, எம்ஆர்எஸ் தியதலாவை தனிமைப்படுத்தல் மையம் 32, தியதலாவை விடுமுறை பங்கலோ தனிமைப்படுத்தல் மையம் 02,பேராதனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 110, பொல்கொல்ல தனிமைப்படுத்தல் மையம் 23, பல்லேகல தனிமைப்படுத்தல் மையம் 17, பெரியகாடு தனிமைப்படுத்தல் மையம் 34,கோபாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 178 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று காலை வரை மொத்தம் 60079 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (31) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 60 தனிமைப்படுத்தல் மையங்களில் 5760 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 30 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 12106 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 502669 ஆகும்
முழுமையாக சுகமடைந்த 140 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (31) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்களில் 03 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களும் ஏனைய 137 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. Running sneakers | adidas NMD Human Race