28th October 2020 12:00:12 Hours
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் 21 வது பணிப்பாளராக கெமுனு ஹேவா படையணியை சேர்ந்த பிரிகேடியர் கீர்த்தி கோட்டேவத்த அவர்கள் திங்கள்கிழமை (26) தனது கடமைகளை பொறுப் ஏற்றுக்கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் மத அனுசரிப்புகளுக்குப் பிறகு உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டு புதிய கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். தற்பொழுது பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக நிமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரியந்த கமகே அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Nike sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE