28th October 2020 14:30:12 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 641 ஆவது பிரிகேட் படைப்பிரிவின் 8 ஆவது படைத் தளபதியாக கேனல் ஜனக் ஜயவர்தன அவர்கள் தனது கடமையை செவ்வாய்க்கிழமை (27) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் 641 ஆவது பிரிகேட் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
641 ஆவது பிரிகேட் படைப்பிரிவின் புதிய தளபதியை பதவி நிலை அதிகாரிகள் வரவேற்றதோடு, அவருக்கு இலங்கை சிங்க படையணியின் 14 ஆவதுபட்டாலியனின் படையினரால் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. பின்னர்,கேணல் ஜனக் ஜயவர்தன அவர்கள் தனது கையொப்பத்தை ஆவணத்தில் வைத்து, கடமைகளை சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் ‘செத் பிரித்’ நிகழ்வுகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் படைத் தலைமையக வளாகத்தில் மரக் கன்று ஒன்றினையும் நட்டார்.
அனைத்து படை வீரர்களுக்கான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அவர் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பயினர்கள் மத்தியில் உரையாடற்றினார். 14 ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சி.டி.அதுல்தோர அராச்சி, பிரிகேட் அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். affiliate tracking url | nike fashion