Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2020 10:00:47 Hours

சொத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் தனது கடைமையை பொறுப்பேற்றல்

இராணுவத் தலைமையகத்தில் உள்ள சொத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் 17 ஆவது பணிப்பாளராக கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சேனக்க கஷ்தூரிமுதலி அவர்கள் தனது கடமையை வெள்ளிக்கிழமை 23 ஆம் திகதி பல சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத அனுஷ்டானங்களின் பின்னர், பிரிகேடியர் சேனக்க கஷ்தூரிமுதலி அவர்கள் தனது கடமையை உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த நிகழ்வில் பணிப்பகத்தைச் சேரந்த பதவி நிலை அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர்.

தற்பொழுது மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியந்த ஜயவர்தன அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Sportswear free shipping | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth