25th October 2020 07:00:47 Hours
143 ஆவது பிரிகேட் படையின் புதிய படைத் தளபதியாக இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சஜித் லியனகே அவர்கள் தனது கடமையை வியாழக்கிழமை 22 ஆம் திகதி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தப்பொவவையிலுள்ள பிரிகேட் படைத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
வருகை தந்த அவருக்கு படையினர் வரவேற்று நுழைவாயிலில் இராணுவ மரியாதையளித்தனர். பின்னர் புதிய பிரிகேட் படைத் தளபதி படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நட்டார். அதனைத் தொடர்ந்து அவர் அனைத்து படையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
குறித்த பிரிகேட் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பட்டாலியன்களின் கட்டளை அதிகாரிகள் ,பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சில இராணுவச் சிப்பாயினரும் இந்நிகழ்வின் போது கலந்து கொண்டனர். Sport media | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov