Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2020 15:00:12 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ தொண்டர் படைத் தளபதியவர்களுக்கு கொஸ்கமை தலைமையகத்தில் கௌரவ மரியாதை

ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (25) இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி பொறுப்பில் இருந்து விடைபெற்றார். குறித்த நிகழ்வானது இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக இராணுவ மரியாதை வழங்கும் நிகழ்வுடன் இடம்பெற்றது.

முகாம் வளாகத்திற்கு வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியவர்களை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரிகேடியர் நிர்வாக அதிகாரி பிரிகேடியர் கிறிஸ்டி ஜயசிங்க மற்றும் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.ஏ.வை பெரேரா ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கை இராணுவ தொண்டர் படையின் “ரெண்டெஸ்வஸ்” மைதானத்திற்கு தலைமை பதவி நிலை அதிகாரி பிரிகேடியர் ரோகித அலுவிஹாரே அவர்களினால் மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதோடு, இராணுவ சம்பிரதாய முறைப்படி அவருக்கு இலங்கை தேசிய படையணியின் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது.

குறித்த சிரேஷ்ட அதிகாரி தனது சுருக்கமான உரையில் இராணுவத்தின் நிரந்தர படைக்கு முன்னணி மாற்று ஸ்தாபனமாக தொழில்முறை மற்றும் பாதுகாப்பு பாத்திரங்களின் செயல்திறனில் தொண்டர் படை உறுப்பினர்கள் எவ்வாறு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதை நினைவு கூர்ந்தார். மேலும், தளபதி எதிர்காலத்திலும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் வாழ்வாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அவர் தனது பதவிக்காலத்தில் அவருக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு அனைத்து இராணுவ உறுப்பினர்களுக்கும், சிவில் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, உயர்நீத்த போர்வீரர்களின் நினைவாக நினைவஞ்சலியும் செலுத்தினார்.

ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதியவர்களின் சேவையினை பாராட்டும் முகமாக அவருக்கு சிறப்பு நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. jordan release date | GOLF NIKE SHOES