28th October 2020 16:17:02 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண அவர்கள் திங்களன்று (26) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது தளபதியாவார்.
தியதலாவைக்கு விஜயத்தை மேற்கொண்ட அவரை பதவி நிலை அதிகாரிகள் வரவேற்றனர் மற்றும் 18 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் அவருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண அவர்கள் மகா சங்க உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ நிகழ்வுக்கு மத்தியில் பல சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் அவர் தனது கையெழுத்தினையிட்டு தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நட்டார்.
அனைத்து படையினருக்கான தேநீர் விருந்துபசாரத்தில் அவர்கலந்து கொண்டதோடு, படையினர் மத்தியில் உரையினையும் நிகழ்த்தினார்.இந்நிகழ்வில் படைப் பிரிவின் படைத் தளபதிகள், பயிற்சி பாடசாலைகளின் கீழ் உள்ள தளபதிகள், பிரிகேட் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர். Nike Sneakers | Nike Air Max 270