29th October 2020 09:04:05 Hours
இன்று (29) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 335 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்கள் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கையிட்டுள்ளது.
இன்று (29) காலை 6.00 வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 5731 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 4690 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று (29) காலை அபுதாபியில் இருந்து KU 264 விமானம் ஊடாக 05 பயணிகளும், டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 12 பயணிகள்ளும் கொழும்பை வந்தடைந்துள்ளர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்ட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 927 நபர்கள் இன்று (29) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், பியகம விலேஜ் 02, பிங்கிரிய ஆசிரியர் பயிற்சி கலாசாலை 164, மீரிகம ஆசிரியர் பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 102, பசுன்ரட்ட ஆசிரியர் பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 94, தம்மதெனிய ஆசிரியர் பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 175, பேராதனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் 139, கொக்கல ரிசோட் தனிமைப்படுத்தல் மையம் 22, தியகம விளையாட்டு கட்டிடத் தொகுதி தனிமைப்படுத்தல் மையம் 13, விடத்தப்பல்லை தனிமைப்படுத்தல் மையம் 17,தேசிய மாணவச் சிப்பாய் படையணி ரந்தம்பே தனிமைப்படுத்தல் மையம் 137, ஐஎன் எஸ்விசி பயிற்சி பாடசாலை தனிமைப்படுத்தல் மையம் 34, சிட்ரஸ் வஸ்கடுவை தனிமைப்படுத்தல் மையம் 28 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று காலை வரை மொத்தம் 58697 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (29) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 70 தனிமைப்படுத்தல் மையங்களில் 7039 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 28 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 7870 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 477156 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 32 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (29) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாவர்.(முடிவு) Sports brands | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD