28th October 2020 08:53:12 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, 'ஜனபதி கம சமக பிலிசந்தர' திட்டத்தின் கீழ், ஹல்தும்முல்லையிலுள்ள ஒரு ஏழைக் குடும்பத்திற்கான பதிய வீட்டினை 18 நாட்களுக்குள் மத்திய பாதுகாப்பு படையினர் நிர்மாணித்தனர். குறித்த பகுதிக்கு ஜனாதிபதி அண்மையில் விஜயம் செய்தபோது, அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் கஷ்டங்களின் நிலை குறித்த நேரடியான தகவல்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யானைத் தாக்குதலால் பெருமளவில் சேதமடைந்த அவர்களின் வீட்டின் நிலைமையானது ஜனாதிபதிக்கு காண்பிக்கப்பட்ட பின்னர், பிரதேச செயலகம் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு ஒரு புதிய வீட்டைக் கட்டுவதற்கு உதவுமாறு அந்த இடத்திலேயே லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு ஜனாதிபதியினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இராணுவத்தினரால் கட்டப்பட்ட புதிய வீடு சனிக்கிழமை (24) மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கோஸ்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
பயனாளிக்களுக்கான வீட்டினை கையளிக்கும் குறித்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், ஏனைய இராணுவச் சிப்பாயினர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர். இதேபோல், மேஜர் ஜெனரல் கீர்த்தி கோஸ்தா அவர்கள் அந்தப் பகுதியில் தங்கியிருந்தபோது, ஹல்தும்முல்ல பகுதியில் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தின் பணிகளையும் பார்வையிட்டார். Nike Sneakers Store | Nike Off-White