28th October 2020 10:53:12 Hours
இன்று (28) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 457 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கிட்டுள்ளது.
இன்று (28) காலை வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 5398 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 4357 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று (28) காலை டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 14 பயணிகள் கொழும்பை வந்தடைந்துள்ளனர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 73 நபர்கள் இன்று (28) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், நிபுன்பூஸ்ஸ தனிமைப்படுத்தல் மையம் 10, ஹபரதுவ தனிமைப்படுத்தல் மையம் 06, ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் மையம் 04, ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையம் 21, ஹோட்டல் ஜெட்விங் புளூ தனிமைப்படுத்தல் மையம் 01, கொஸ்கொட செரடன் ஹோட்டல் செரட்டன் தனிமைப்படுத்தல் மையம் 21, கிரீன் பரடைஸ் தனிமைப்படுத்தல் மையம் 05, கொக்கல ரிசோட் தனிமைப்படுத்தல் மையம் 05, ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்றுவரை மொத்தம் 58396 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (28) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் 7530 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 27 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10740 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 469258 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 110 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (28) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாவர். (முடிவு)best Running shoes | Air Jordan