Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2020 22:00:18 Hours

ஜனாதிபதி உத்தரவுகளுக்கமைவாக இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற நொப்கோ பணிக்குழு கூட்டம்

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு கூட்டம் இன்று (26) இராணுவ தலைமையகத்தில், கொளரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ராதேவி வன்னிஆராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, நொப்கோவின் தலைரும் பாதுகாப்புப் தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், அவச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், தலைமை தொற்றுநோயியல் நிபுணர், மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் இன்னும் சில முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டு தற்போதைய கொவிட் தடுப்பு பொறிமுறையின் செயல்திறனை மதிப்பாய்வு செய்த்தோடு, அதிகமான தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகுவதனால் அதற்கான மூலோபாய அணுகுமுறைகளுக்கு தேவையான அவசர மாற்றங்கள் தொடர்பாகவும் பரிசீலினை செய்தனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைவாக, கொவிட-19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் இன்று பிற்பகல் 26 ஆம் திகதிய கூட்டத்தின் போது, தொற்று நோயளிகளுடன் தொடர்புகளை பேணிய முதலாவது தொடர்பார்களில் உள்ளதொற்று நோயளர்களை கண்டறிவதற்காக இன்று பிற்பகல் முதல் சுய தனிமைப்படுத்தும் நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டள்ளது. அனைத்து மட்டங்களிலும் தடுப்பு வழிமுறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார ஊழியர்களும் மற்றவர்களும் இந்த மூலோபாய மாற்றத்திற்கு இணங்க வேண்டியதன் அவசியத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் அவர்களது சொந்த வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தல் மேலும் வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கும்.

கிராம மட்டங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை விதித்தல், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் திறன் மேம்பாடு, நிர்வாகத்திற்கான புதிய மூலோபாய அணுகுமுறைகளைப் பயன்படுத்துதல், அவசரகாலத்தில் அளவிலான நபர்களை அனுமதிப்பதற்கான நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளின் தயார்நிலை, பி.சி.ஆர் சோதனை முடிவுகளின் தாமதத்தைக் குறைத்தல், பொலிஸ் மட்டத்திலான தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் புதிய கொத்துக்களின் மீள் எழுச்சி விடயங்கள் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டன.

புதிய தொற்றுக்கள் தோன்றியதை அடுத்து, அனைத்து மட்டங்களிலும் உள்ள அனைத்து மூலோபாய செயல்பாட்டு வழிமுறைகளையும் மீண்டும் பார்வையிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதை விரைவுபடுத்தவும் மேலும் மையப்படுத்தவும் பரிந்துரைத்தார்.

விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகு பணிக்குழுவின் உறுப்பினர்கள், மேலும் மேலும் தொற்று நோய்கள் கண்டறியப்படும்போது மிகவும் பயனுள்ள மற்றும் சிறந்த முடிவு சார்ந்த நடைமுறையான பொலிஸ் பிரிவு மட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதிப்பது தொடர்பாக உற்றுநோக்கினர்.bridge media | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE