26th October 2020 11:07:48 Hours
இன்று (26) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் மேலும் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 351 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 கப்பல் ஊழியர்கள் பெஸ்ட் வெஸ்டன் கிருலப்பனை தனிமைப்படுத்தல் மையத்திலும் கட்டார் நாட்டைச் சேர்ந்த தந்த ஒருவர் ஹோட்டல் கோல்டி சேன்ட் தனிமைப்படுத்தல் மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர். ஏனைய 348 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கையிட்டுள்ளது.
அதேவேளை, கொவிட் தொற்றினால் 70 வயதை நிரம்பிய நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் திகதி இறந்துள்ளார். அத்துடன் கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆகும்.
இன்று (26) காலை வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 4400 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 3359 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாவர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 316 நபர்கள் இன்று (26) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையத்தில் 02, ஹோட்டல் ஜெட் விங் லகூன் தனிமைப்படுத்தல் மையத்தில் 02, தம்மின்ன தனிமைப்படுத்தல் மையத்தில் 74, பொலிஸ் கட்டிட கபரதுவ தனிமைப்படுத்தல் மையத்தில் 01, பிங்கிரிய போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் மையத்தில் 168,ஹொரன ஆசிரியர் பயிற்சி நிலைய தனிமைப்படுத்தல் மையத்தில் 18, கொக்கல பீச் தனிமைப்படுத்தல் மையத்தில் 51 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று காலை வரை மொத்தம் 57427 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (26) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் மையங்களில் 8421 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 25 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 9189 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 450836 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 89 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (26) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவரும், மீதமுள்ள 88 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாவர். (முடிவு)Sport media | Nike Air Max