Header

Sri Lanka Army

Defender of the Nation

24th October 2020 06:55:17 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி தனது புதிய பதவியேற்றலினை தற்போதைய பதவியிலிருந்து விலகல்

இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதியாக விரைவில் புதிய கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் முகமாக, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் வியாழக்கிழமை (22) தனது கடமைகளில் இருந்து விலகிக் கொண்டார்.

பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இருந்து விடைபெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்கவுக்கு கடந்த இரண்டு நாட்களில் 21, 54, 56, மற்றும் 62 பிரிவுகளுக்கான அவரின் இறுதி விஜயங்களின் போது அப்பைடைப் பிரிவுகளினால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இராணுவ கொளரவ மரியாதைகள் வழங்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் வியாழக்கிழமை (22), இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதைகள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்றன.குறித்த நிகழ்வில் அனைத்து படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் மற்றும் பதவி நிலை அதிகாரிகள் பங்கேற்றனர். மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் வன்னி பாதுகாப்பு படையின் 20 ஆவது தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Nike air jordan Sneakers | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf