24th October 2020 07:55:17 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் தனது கடமையை வெள்ளிக்கிழமை (23) ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் வன்னி பாதுகாப்பு படையின் 21 ஆவது படைத் தளபதியாகும்.
விழாவின் முதல் கட்டமாக வளாகத்தின் நுழைவாயிலில் அவருக்கு இராணுவ மரியாதையிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் உயர் நீத்த படை வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவர் சிரேஷ்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார். பின்னர், 11 ஆவது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டு.
அதன்பிறகு, மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் தலைமையக அலுவலக கட்டிடத் தொகுதிக்கு முன்னால் மரக்கன்று ஒன்றினையும் நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் படைப் பிரவுகளின் படைத் தளபதிகள் , பிரிகேட் படைத் தளபதிகள் , சிரேஷ்ட அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் ஆகியோரின் முன்னிளையில் மத அனுஷட்னங்களுக்கு மத்தியில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஏனைய படையினரின் உணவக அறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து படையினருக்கான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி, அனைத்து படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், பிரிகேட் படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் புதிய வன்னி தளபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.affiliate link trace | Trending