Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2020 11:00:19 Hours

வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள்/ இணைப்பதிகாரிகளுக்கு கொவிட்-19 நிலைமை தொடர்பாக விளக்கமளிப்பு

அவுஸ்திரேலிய, பங்களாதேஷ், சீனா, இந்தியா, ஜப்பான், பாக்கிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கொழும்பை தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆலோசகர்கள் / இணைப்பாளர்கள் இன்று (23) கொவிட்-19 பரலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தற்போதைய தடுப்பு முயற்சிகள் மற்றும் அதன் பரவுதல் மற்றும் கொத்தணிகள் தொடர்பாக பெற்றுக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, எதிர்காலத்தில் எந்தவொரு பெரிய அளவிலாள பரவல் நிகழும்போது தொற்றுநோயியல் நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படும் தொடர் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள மூலோபாய அணுகுமுறைகள் குறித்து நொப்கோ தலைவர் விரிவாக விளக்கினார்.

கலந்துகொண்ட இராஜதந்திரிகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள இடங்கள், பி.சி.ஆர் சோதனைகளை நடத்துதல், தடுப்புத் ஊளியர்களின் சுகாதாரப் பாதுகாப்பு, மருத்துவ அம்சங்கள், கொத்தணி பரவல் போன்றவை தொடர்பான விளக்கங்கள் மற்றும் விவரங்களை இராணுவத் தளபதியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குழு கெப்டன் சீன் அன்வின், உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையத் மக்ஸுமுல் ஹக்கீம், சீன தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி சிரேஷ்ட கேணல் வான் டோங், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூத், ஜப்பான் தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி கெப்டன் காகு புகௌரா,பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முகமட் சப்தார் கான், ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை இணைப்பதிகாரி கேணல் டெனிஸ் ஐ.ஷோக்ட ,அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் இராணுவ இணைப்பதிகாரி லெப்டினன் கேணல் டிராவிஸ் ரே கொக்ஸ் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேவிட் அல்ப்ரட் அஷ்மான், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு மற்றும் இராணுவ இணைப்பாளர் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். bridgemedia | UOMO, SCARPE