23rd October 2020 13:00:19 Hours
கடற்படை (01), விமானப்படை (01), பங்களாதேஷ் (01), பாகிஸ்தான் (01) மற்றும் சாம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி உட்பட 35 அதிகாரிகள் ஒரு வருட இல 6- விணியோக பதவிநிலை பாடநெறியை திருகோணமலையிலுள்ள இராணுவ நிருவாக கல்லூரியில் நிறைவு செய்து, வியாழக்கிழமை 22 ஆம் திகதி கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர்கூடத்தில் பிரதம அதிதியான கொவிட்-19 பரலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் தங்களது பட்டப்படிப்பிற்கான சான்றிதல்களை பெற்றுக் கொண்டனர்.
அங்கு வருகை தந்த பிரத அதிதியவர்கள் இராணுவ விணியோக கல்லூரியின் தளபதி பிரிகேடியர் சமன் லியனகே மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
இப்பாடநெறியானது பதவி நிலை அதிகாரிகளின் கடமைகள், பாத்திரங்கள் மற்றும் பணிகள், வாய்மொழி மற்றும் எழுத்து வடிவிலான உத்தரவுகள், நிர்வாகத்தின் கொள்கைகள், படையணி மட்டத்திலான விணியோக முறைகள், விணியோக செயல்பாடுகள், விணியோக விதிமுறைகள், நடைமுறை மாற்றங்கள் உள்ளிட்ட பாடங்களானது கொத்தலவை பதுகாப்பு பல்கலைக்கழகம் மற்று அரச நிறுவனங்களின் சிறந்த நிபுணர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் (பயிற்றுனர்கள்) ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
இராணுவ விணியோக கல்லூரியின் தளபதி அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வரவேற்ற பின்னர், 35 பட்டதாரிகளுக்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குறித்த பாடநெறியின் ‘சிறந்த நிருவாக திட்டமிடலாளர்’ விருது இலங்கை சிங்க படையணியைச் சேர்ந்த மேஜர் டி.ஜி.எஸ்.பி தென்னகோண் அவரகளுக்கும், இல-6 பாடநெறியின் சிறந்த செயல்திறன் விருது பொறியியலாளர் சேவைப் படையணியைச் சேர்ந்த கே.ஏ.ஜே புஷ்பகுமார அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தனது உரையில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நிருவாகம் மற்றும் விணியோகம் குறித்த தொழில்முறை படிப்புகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், எந்தவொரு அமைப்பினதும் முன்னேற்றத்திற்கான அவற்றின் நலன் தொடர்பாக சுட்டிக் காட்டினார். உலகில் வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாடநெறியின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பின்னர், நிகழ்ச்சி நிரலில் உள்ள அதிகாரப்பூர்வ கல்லூரியின் இதழான 'கோல்டன் லொக்' மற்றொரு முறைப்படி தொடங்கப்பட்டது. முதல் சில பிரதிகள் இராணுவத் தளபதி உட்பட விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன. அன்றைய நிகழ்வின் இறுதியில் இராணுவ நிருவாக கல்லூரியின் தளபதி பிரதம அதிதியவர்களுக்கு ஒரு சிறப்பு நினைவுச்சின்னத்தை வழங்கினார்.
2011ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்ட இராணுவ நிருவாகக் கல்லூரியானது சில ஆண்டுகளுக்கு முன்பு பனாகெடை இராணுவ முகாம் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற விணியோகம் தொடர்பான மற்ற அனைத்து பயிற்சி திட்டங்களையும் ஒன்றிணைத்தது.
பட்டமளிப்பு விழாவில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள்.பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அறிஞர்கள் மற்றும் பல அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | Nike