Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2020 07:08:19 Hours

7 ஆவது கெமுனு ஹேவா படையணி படையினரின் ஒத்துழைப்புடன் பாடசாலை கட்டிட நிர்மாணம்

குருவில் தமிழ் மகா வித்யாலயத்தின் கோரிக்கையின் பேரில், குறித்த பாடாலையில் புதிய 20x10 பாடசாலை கட்டிடத்தை நிர்மாணிக்க, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 681 பிரிகேட் படைப்பிரிவின் 7 ஆவது கெமுனு ஹேவா படையினர் தங்களது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனித வளத்தினை வழங்க முன்வந்துள்ளனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் பாடசாலை அதிகாரிகளின் வேண்டுகோளின் பிரகாரம் அத்திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.இந்த கட்டிடம் பாடசாலையின் உணவு பரிமாறும் மண்டபமாக பயன்படுத்தப்பட உள்ளது.

புதிய கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்கும் விழாவில் 681 ஆவது படைப்பிரிவின் தளபதி கேணல் டி.ஆர்.என் ஹெட்டிஆராச்சி, 68 மற்றும் 681 ஆவது படைப்பிரிவுகளின் சிவில் விவகார அலுவலர்கள், 7 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.டபிள்யூ.ஐ.ஆர் சில்வா, பாடசாலை அதிபர், 'அபிமன்' அரசு சார்பற்ற நிறுவன பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கட்டிடத்திற்கான அனுசரணையினை அரச சார்பற்ற நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. latest jordans | Nike