Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2020 09:00:19 Hours

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தினால் உலர் உணவுப் பெதிகள் வழங்கள்

இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலர்ந்த உணவுப் பொதிகளானது, போகஹபிட்டிய சாந்த முதியோர் இல்லம், கல்கிஸ்ஸையிலுள்ள கிதுசேவன மேரியன்ஸ் முதியோர் இல்லம், கம்பஹாவில் உள்ள சுவ செவன முதியோர் இல்லம், கோட்டேயிலுள்ள புனித தோமஸ் தேவாலயம் மற்றும் மகாபகேயிலுள்ள முதியோர் இல்லம் ஆகியவற்றில் உள்ள முதியவர்களுக்கு இராணுவத்தின் நிறைவாண்டு தின கொண்டாட்டத்தின் ஒரு திட்டமாக வியாழக்கிழமை (22) நன்கொடையாக வழங்கப்பட்டன.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவ செயலாளரும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜயஷாந்த கமகே அவர்கள் குறித்த தொண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்விற்கான அனுசரணையானது இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் உறுப்பினர்களினால் வழங்கப்பட்டது. குறித்த இல்லங்களுக்கு விஜயம் செய்த ஏற்பாட்டாளர்கள் முதியவர்களுடன் உரையாடி அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் மஞ்சுல கருணாரத்ன மற்றும் உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் அவர்களும் இந்நிக்வில் கலந்து கொண்டார். latest jordans | Klær Nike