Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2020 08:08:19 Hours

கடந்த 24 மணிநேரத்திற்குள் மேலும் தொற்றுக்குள்ளான 866 பேர் -நொப்கோ தெரிவிப்பு

இன்று (24) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 866 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தென் கொரியாவில் இருந்து வந்தவரும் ஏனைய 865 பேர் உள்நாட்டில் இணங்கானப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (24) காலை 6.00 மணி வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 3684 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 2643 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்று (24) தோகா கட்டாரில் இருந்து QR 668 விமானத்தினூடாக 29 பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 46 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று (24) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், நிபுன பூஸ்ஸ தனிமைப்படுத்தல் மையத்தில் 06, ஆயுர்வேத ராஜகிரிய தனிமைப்படுத்தல் மையத்தில் 06,ஹோட்டல் கோல்டி சேன்ட் தனிமைப்படுத்தல் மையத்தில் 07,ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையத்தில் 02, ஹொரன போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் மையத்தில் 22,ஹோட்டல் கிரீன் பரடைஸ் தனிமைப்படுத்தல் மையத்தில் 03 ,ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.

அதேபோல் இதுவரை மொத்தம் 56837 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (24) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் மையங்களில் 8455 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 23 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 8641 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 423332 ஆகும்.

இன்று காலை (24) 0600 மணியலவில், முழுமையாக சுகமடைந்த 83 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 05 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும், மீதமுள்ள 78 பேர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது. (முடிவு) Buy Kicks | New Balance 991 Footwear