Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2020 19:48:19 Hours

புதிய 59 வது படைப்பிரிவு தளபதி பதவியேற்பு

முல்லைத்தீவு 59 வது படைப்பிரிவின் 17 வது தளபதியாக பிரிகேடியர் மனோஜ் லமஹேவா வியாழக்கிழமை (22) பதவியேற்றார்.

புதிதாக நியமனம் பெற்ற தளபதி முகாம் வளாகத்திற்கு வந்தப் போது பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவியேற்றார். தொடர்ந்து உரையாற்றிய அவர் தனது கடமைகளைச் செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் பதவியேற்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் மரக்கன்றினை நாட்டி வைத்தார்.

நிகழ்வில் படைப்பிரிவு தலைமையக பதவிநிலை அதிகாரிகள், 591, 592 மற்றும் 593 பிரிகேட்களின் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர். Sport media | Nike