21st October 2020 11:50:13 Hours
யாழ் பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் 515 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்திற்கு தனது விஜயத்தினை புதன்கிழமை 21 ஆம் திகதி மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தினை மேற்கொண்ட அவரை 515 ஆவது பிரிகேட் படைத் தளபதி பிரிகேடியர் பாலித்த கொடல்வத்த அவர்கள் வரவேற்றதோடு, அவர்களின் வகிபாகம் மற்றும் பணி தொடர்பாக தளபதிக்கு விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, யாழ் பாதுகாப்பு கட்டளைத் தளபதியவர்கள் கெமுனு ஹேவா 2 ஆவது பட்டாலியன் மற்றும் 10 ஆவது இலங்கை பீரங்கி படையணித் தலையம் உள்ளிட்ட படையணிகளுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தினை மேற்கொண்ட பாதுகாப்பு கட்டளைத் தளபதியவர்கள் கட்டளையதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.51 ஆவது பாதுகாப்பு படைத் தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரி, பிரிகேடியர் நிர்வாக மற்றும் விடுதிகள் அதிகாரி ஆகியோரும் குறித்த விஜயத்தின் போது இணைந்து கொண்டனர். Best Authentic Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival