21st October 2020 21:04:03 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் இயங்கும் 12 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 24 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால், சாரதி அனுமதி பத்திர சோதனைகளுக்கான ஒரு புதிய பொது இடமானது அமைக்கப்பட்டது. குறித்ததேவைப்பாடானது பிரிதேசத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த்தோடு, இதற்கான அனுசரணையினை தனியார் நன்கொடையாளர் வழங்கினார்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் ஆசிர்வாத்த்துடன், 59 பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரியந்த பெரேரா அவர்கள் ஒக்டோபர் 19 ஆம் திகதி குறித்த புதிய சோதனை மைதானத்தை திறந்து வைத்து உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
குறித்த அலுவலக கட்டுமானங்களுக்கான நிதியுதவியானது முல்லைத்தீவிலுள்ள வரையறுக்கப்பட்ட தனியார் அவலோன் விடுமுறை விடுதி நிறுவத்தினால் வழங்கப்பட்டது.படையினர் இயந்திரங்களைப் பயன்படுத்தி சில நாட்களில் குறித்த திட்டத்தை நிறைவுசெய்தனர். சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றதுடன் அத் திறப்பு விழாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர்.bridgemedia | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos