21st October 2020 11:55:13 Hours
இன்று (22) காலை அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் கொவிட் - 19 தொற்றாளர்கள் 167 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் எத்தியோப்பியாவிலிருந்து வருகை தந்து வெளிசர விமானப் படை தனிமைப் படுத்தல்மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர். ஏனைய 166 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று (22) காலை 6.00 மணி வரையில் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2510 பேர் ஆகும். அவர்களில் 1207 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 1303 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று (22) தோகா கட்டாரில் இருந்து QR 668 விமானத்தினூடாக 29 பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 165 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று (22) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில்,நிபுன பூஸ்ச தனிமைப்படுத்தல் மையத்தில் 13,ருவல கற்பிட்டி தனிமைப்படுத்தல் மையத்தில் 04,ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் மையத்தில் 05,பியகம விலேஜ் தனிமைப்படுத்தல் மையத்தில் 10, ஹோட்டல் ஜெட்விங் புளூ தனிமைப்படுத்தல் மையத்தில் 04,கெம்லட் பீஜ் தனிமைப்படுத்தல் மையத்தில் 13,பிரன்டிக்ஸ் பூனானி தனிமைப்படுத்தல் மையத்தில் 116,ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இதுவரை மொத்தம் 56112 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று காலை (22) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 69 தனிமைப்படுத்தல் மையங்களில் 7754 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 21 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 8568 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 406,466 ஆகும்.
இன்று காலை (22) 0600 மணியலவில் முழுமையாக சுகமடைந்த 44 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 04 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும், மீதமுள்ள 40 பேர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் தெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாகும். (முடிவு)Buy Kicks | Nike Air Max 270