Header

Sri Lanka Army

Defender of the Nation

18th October 2020 07:58:07 Hours

குணமடைந்த 37 பேர் வீடு செல்லல்-நொப்கோ தெரிவிப்பு

இன்று காலை (20) அறிக்கையின்படி 87 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசியசெயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (20) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2164 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 1123 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாகும்.

இன்று காலை ஜபான் நரீட்டாவில் இருந்து QR 668 விமானம் ஊடாக 04 பயணிகள் வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் பிசிஆர் பிரிசோதனையின் பின்னர் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 72 நபர்கள் (20) ஆம் திகதிக்குள் வீடு திரும்ப உள்ளனர். அவர்கள், ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் மையத்தில்01, ஹோட்டல் ஜெட்விங் புளூ தனிமைப்படுத்தல் மையத்தில் 01, ஜெட்விங் பீச் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் 01, கல்கிஸ்ஸை ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தில் 01, மற்றும் காயா வெல்நெஸ் ரிசோட் தனிமைப்படுத்தல் மையத்தில் 10,ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையத்தில் 04, இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணி தனிமைப்படுத்தல் மையத்தில்11, சீலேன்ட் லொட்ஜ் தனிமைப்படுத்தல் மையத்தில் 20, தியகம் விளையாட்டு கட்டிடத் தொகுதி தனிமைப்படுத்தல் மையத்தில் 23 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் நபர்கள் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.

அதேபோல் இன்று காலை வரை 54,328 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று (19) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 76 தனிமைப்படுத்தல் மையங்களில் 8623 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்( இராணுவ தனிமைப்படுத்தல் மையங்கள்-65, கடற்படை தனிமைப்படுத்தல் மையங்கள் -7, விமானப்படை தனிமைப்படுத்தல்மையங்கள் -4) . நேற்று 19 ம் திகதிக்குள் நாடுபூராக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்க 6873 ஆகும். அத்தோடு இதுவரை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 391,060 ஆகும்.

இன்று காலை (20) 0600 மணியளவில் முழுமையாக சுகமடைந்த 37 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 20பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும், மீதமுள்ள 17 பேர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புபட்டவர்களாவர்.(முடிவு) Sport media | Women's Sneakers