Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2020 16:12:04 Hours

62 ஆவது படைப் பிரிவின் புதிய தளபதிக்கு கௌரவ மரியாதை

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்கு புதிதாத நியமிக்கப்பட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களை அப்படைத் பிரிவின் படையினர் படைத் தலைமையகத்தில் வைத்து புதன்கிழமை (14) வரவேற்றனர்.

வெலியோயாவில் உள்ள தலைமையக வளாகத்திற்கு வருகை தந்ந அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது.

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட படைத் தளபதி அவர்கள்பெடைப் பிரிவின் வளாகத்தில் ஒரு மரக்கன்றினை நட்டதோடு, அனைத்து படையினருடனும் இணைந்து தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

அனைத்து பிரிகேட் படைத் தளபதிகள், 62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் இயங்கும் படையணிகளின் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். jordan release date | Nike Shoes