18th October 2020 06:58:07 Hours
இன்று காலை (19) அறிக்கையின்படி 63 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 63 பேரில் ஜபானில் இருந்து வருகை தந்து ஹோட்டல் ஈடன் காடன் ஹோட்டல் தனிமை படுத்தல் மையத்தில் (02) பேரும், மீதமுள்ள 61 நபர்கள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (19) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,077 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 1,036 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று (19) காலை UL 455 விமானம் ஊடாக ஜபான் நரீட்டாவில் இருந்து 10 பயணிகள் வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் பிசிஆர் பிரிசோதனையின் பின்னர் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 205 நபர்கள் (19) ஆம் திகதிக்குள் வீடு திரும்ப உள்ளனர். அவர்கள், ராஜகிரிய தனிமைப்படுத்தல் மையத்தில் 37, ஹோட்டல் ஜெட்வின் சீ தனிமைப்படுத்தல் மையத்தில் 40, மந்தார ரிசோட் தனிமைப்படுத்தல் மையத்தில் 50 , திக்வெல்ல ரீசோட் தனிமைப்படுத்தல் மையத்தில் 78 நபர்கள் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று காலை (19) வரை 54,328 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று கால வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 83 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,287 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 18 ம் திகதிக்குள் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்க 9,838 ஆகும். அத்தோடு இதுவரை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 383,961 ஆகும்
இன்று காலை (19) 0600 மணியளவில் முழுமையாக சுகமடைந்த 08 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 05 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும், மீதமுள்ள (03) பேர் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களாவர்.(முடிவு) Nike sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival