15th October 2020 12:11:11 Hours
இன்று காலை (18) அறிக்கையின்படி 121 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 121 பேரில், 06 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் ஆவர், அவர்களில் பிலிபின் தேசிய கடல் பாதுகாப்பு அதிகாரிகள் (02) ஹோட்டல் பெஸ்ட் வெஸ்டன் தனிமைப்படுத்தல் மையத்திலும், ரஷ்யா தேசிய கடல் பாதுகாப்பு அதிகாரி (01) பேர்ஜயா ஹாட்டல் தனிமைபடுத்தல் மையத்திலும், ரெட் சீ பிரதேசத்தில் கடல் பாதுகாப்பு அதிகாரி (01), ஹபராதுவ பொலிஸ் கட்டட தனிமைப்படுத்தல் மையத்திலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் (01) மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து வருகை தந்த ஒருவரும் (01) விண்ட் பீச் ரிசோர்ட் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமை படுத்தப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள 115 பேர் பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (18) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொவிட் கொத்தணியில் முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,016 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் ஏனைய 975 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று (18) காலை QR 668 விமானம் ஊடாக தோகா கட்டாரில் இருந்து 26 பயணிகள் வருகை தந்துள்ளனர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட (66) நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இன்றைய தினம் (18) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்கள், ஹொட்டல் பெட்வின் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 01, கல்கிஸ்ச தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 02, ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 28 பேர், ஹோட்டல் கீரீன் பெரடைஸ் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 07, கொஸ்கொட சேர்டன் ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 02, கல்பிட்டிய ருவல ரீசோட் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 02, ஹபராதுவ பொலிஸ் கட்டட தனிமைப்படுத்தல் மையத்தில் 10 பேர் மற்றும் தம்பகொலபடுன ரீசோட் தனிமைபடுத்தல் மையத்தில் 14 பேர் ஆவர்.
அதற்கமைய இன்று காலை (18) வரை 53,937 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று காலை (18) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 82 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 9,386 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 17 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 8,724 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 374,448 ஆகும்.
இன்று காலை (18) 0600 மணிக்கு 10 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் 07 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும் மிகுதி 3 பேர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாவர். jordan release date | Nike