Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2020 09:58:16 Hours

இராணுவத்தினர் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஈடுபாடு" நொக்போ தலைவர் தெரிவிப்பு

நாட்டில் வேவ்வேறு பிரதேசங்களில் "கொவிட்-19 நோய்தொற்றை தடுப்பதற்காகவும், மினுவாங்கொடை மற்றும் காட்டுநாயக்க பிரதேசத்தில் நோய்தொற்றுக்குள்ளனவர்களையோ அல்லது புதிய தொற்றாளர்களையும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களை உரிய பிரதேசங்களில் இருந்து தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு சுகாதார வைத்திய அலுவலக ஆளனியினர் பற்றாகுறையினால், பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முப்படையினர் விரைவான நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று 16 ஆம் திகதி கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் இடம் பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் கௌரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ராதேவி வன்னியராச்சி கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ். ஸ்ரீதரன், மற்றும் பல சுகாதாரத் துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்து கொண்டனர்.

இன்றைய கலந்துரையாடலில் சுகாதார வழிகாட்டுதல்கள், அதன் ஏற்பாடுகள் மற்றும் சவால்கள், புதிய தொற்று நோய்கான முகாமைத்துவம், படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் விசேட சிகிச்சை தேவைகள், கட்டுநாயக்க தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல் தொடர்பான புதிய வர்த்தமானி வெளியீடு தொடர்பாக கலந்துரையாடினர். அத்துடன், கட்டுநாயக்க தொழிற்சாலையின் ஊழியர்கள் குழுக்களாக இயங்கி புதிய நோய்தொற்றாளர்களை மினுவாங்கொட பகுதிகளிலிருந்து கட்டுநாயக்க சுதந்திர வர்தக வலையத்துக்கு கொண்டுசென்றார்கள் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

கடந்த கலந்துரையாடல்களில் முடிவுகளைத் தொடர்ந்து பல பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏன் விதிக்கப்பட்டது என்பதையும் இக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. இது ஒரு கட்டாய நடவடிக்கை என்பதால் சமூகத்தில் பொது மக்களிடையே வைரஸ் தொற்று பரவுவதைக் குறைக்க இது உதவியது என்று மேலும் விவாதிக்கப்பட்டது.

இலங்கை வரும் வெளிநாட்டினரின் வருகை, தனிமைபடுத்தல் மையங்களில் இடமின்மை மற்றும் ஏனைய நோய் தொற்றாளர்களின் நடைமுறை பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சரக்கு விமானங்கள், போக்குவரத்து சார்டர் விமானங்கள் மற்றும் இராஜதந்திரிகளின் நடமாட்டம் போன்றவை விமான நிலையம் முழுவதும் வழக்கம் போல் தொடரும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இனி வரும் காலங்களில் நிலைமை மோசமாகிவிட்டால், மருத்துவமனைகளில் கிடைக்கும் திறன்கள் மற்றும் தற்செயல் திட்டங்கள் குறித்து பணிக்குழு உறுப்பினர்களுக்கு சுகாதார சேவைகளின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தெழிவுபடுத்தினார். அத்துடன் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையின் சமீபத்திய அதிகரிப்பு மற்றும் அந்த சோதனைகளின் துல்லியம் மதிப்பீடு செய்யப்பட்டதுடன் அதே நேரத்தில் முழு சுகாதார ஊழியர்களின் கூட்டு உறுதிப்பாட்டைப் பாராட்டியதுடன், இந்த குறிப்பிட்ட ஆபத்தான நிலைமைக்காக தேசிய அவசரகால பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தனித்தனி மூலோபாய ஏற்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அனைத்து சுதந்திர வர்தக வலையத்தையும் உள்ளடக்கியது மற்றும் இந்த வேவ்வேறான செயற்பாடுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலின் பின்னர், நொக்போ தலைவர் ஊடகங்களுக்கு சில கருத்துகளைத் தெரிவித்தார். அந்த கருத்துகளின் வீடியோ பின்வருமாறு: trace affiliate link | Nike