Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2020 12:01:11 Hours

மேலும் 110 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் –நொக்போ தெரிவிப்பு

இன்று காலை (17) அறிக்கையின்படி 110 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (17) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1901 ஆகும். அதில் 1,041 பேர் தொழில்சாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய 860 பேர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புபட்டவர்களாவர்.

இன்று (17) காலை QR 668 விமானம் ஊடாக தோகா கட்டாரில் இருந்து வருகை தந்த 39 பயணிகள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்குப் பிறகு முப்படையினரால் நிர்வகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட 198 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இன்றைய தினம் (17) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்கள், தியதலாவை தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 04, பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 50, அனுராதபுர வாசல லெஜர் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 18 பேர், தியகம விளையாட்டு வளாகத்தின் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 01, ஹோட்டல் மிராஜ் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 35, கல்கிஸ்ச ஹோட்டல் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 34, வெள்ளவத்தை தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த 23, ஹோட்டல் டொல்பின் தனிமைப்படுத்தல் மையத்தில் 29 மற்றும் பியகம விலேஜ் தனிமைபடுத்தல் மையத்தை சேர்ந்த 04 பேர் ஆவர்.

அதேபோல், இன்று காலை வரையான காலப் பகுதியில் 53,395 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (17) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 86 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,415 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (16) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 7675 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 373,534.ஆகும்.

பூரணமாக குணமடைந்த 05 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (17) காலை 6.00 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.(நிறைவு) jordan release date | Nike Shoes, Sneakers & Accessories