15th October 2020 11:41:11 Hours
இன்று காலை (16) அறிக்கையின்படி 74 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அவர்களில் 06 பேர் வெளிநாட்டவர்கள் அவர்களில் (மவுண்ட் லிவினியா தனிமைபடுத்தல் மையம் 2 கப்பல் ஊழியர், (seafarer) ஹபரதுவ பொலிஸ் தனிமைபடுத்தல் மையம் 1, மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்து 3 வெளிநாட்டவர்கள் முல்லைத்தீவு தனிமைபடுத்தல் மையத்தில்) மேலும் 68 பேர் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள். என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (16) அறிக்கையின்படி 1791 பேர் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை கொத்தணியில் அவர்களில் 1041 பேர் தொழிற்சாலையின் ஊழியர்கள், மற்றும் 750 பேர் ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்று காலை, அவுஸ்ரேலியாவில் இருந்து UL 607 விமானம் மூலம் வருகை தந்த 12 பயணிகள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பிறகு முப்படையினரால் நிர்வகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்ட 397 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இன்றைய தினம் (15) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் ஜெட்வின் புளூ தனிமைப்படுத்தல் மையத்தில் (36), ஜெட்வின் சீ தனிமைப்படுத்தல் மையத்தில் (12), மற்றும் ஹொட்டல் டொல்பின் தனிமைபடுத்தல் மையத்தில் (01), ஹொட்டல் மவுன்ட் லிவினியா தனிமைபடுத்தல் மையத்தில் (142), தியகம தனிமைபடுத்தல் மையத்தில் (05), வாஸ்கடுவ தனிமைபடுத்தல் மையத்தில் (110), கந்தகாடு தனிமைபடுத்தல் மையம் (41) மற்றும் பிரன்டெக்ஸ் பூனானி தனிமை படுத்தல் (50) ஆகிய தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.
அதேபோல், 16 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 53,011 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (15) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 84 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,556 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (15) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 6543 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 365,859..ஆகும்.
பூரணமாக குணமடைந்த 23 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (16) காலை 6.00 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 07 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களும் 16 பேர் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களும் ஆவர்.(நிறைவு) url clone | Air Max