Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2020 12:41:11 Hours

கிளிநொச்சியில் கொவிட் 19 பரவலின் தாக்கத்தின் அவசரகால வகிப்பங்கை மதிப்பிடுகிறது

மினுவாங்கொடை கொத்தனி கொவிட் 19 பரவல் மற்றும் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டு சிறப்பு ஒருங்கிணைப்பு மாநாடு கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தில் புதன்கிழமை (14) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தலைமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ஆர் கேதீஸ்வரன், சுகாதார சேவைகளின் மாகாண பணிப்பாளர் டொக்டர் ஏ.கேதீஸ்வரன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் என் சரவணபவன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன்போது கொவிட் 19 அவசர சூழ்நிலையில் மேலதிக வைத்தியசாலை வசதிகளை நிறுவுவதற்கான நடைமுறை சிக்கல்களை தீர்க்க ஒரு ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்கல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு கிளிநொச்சி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கொவிட் 19 குறித்து தற்போதைய முன்னேற்றங்கள், தடுப்பு நடைமுறைகள் மற்றும் செயல் திட்டங்கள் தொடர்பாக ஆழமாக ஆராயப்பட்டது. மாகாண சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மருத்துவ அதிகாரி, பிரதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி - கிளிநொச்சி, வைத்திய ஊழியர்கள் மற்றும் சிரேஸ்ட பணி நிலை அதிகாரி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். latest jordan Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping