Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2020 11:07:02 Hours

படையினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 ஆவது படைப்பிரிவின் 611 பிரிகேடில் உள்ள 8 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பின் தங்கிய குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர்.

தம்பெல்கொட மகா வித்யாலயத்தில் கல்வி கற்கும் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த 65 மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் மற்றும் பாடசாலை பைகள் போன்றவை நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புள்ள நன்கொடைகள் வழங்கப்பட்டதுடன், 611 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக உடோவிட்ட, 8 ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் கே. அதகோரல , அதிகாரிகள் மற்றும் படையினரின் பலர் கலந்து கொண்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக்க மற்றும் 61 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஆகியோர் ஆசீர்வாதங்களையும் தேவையான வழிக்காட்டல்களையும் வழங்கினர். Best Authentic Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth