Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2020 11:15:02 Hours

படையினரால் காயமடைந்த பெண்ணை மீட்டு சேதமடைந்த கூரைகளை திருத்தும் பணிகள் முன்னெடுப்பு

கொட்டகலையில் அமைந்துள்ள 581 பிரிகேட் படையினரால் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டிக் ஓயா பட்டுவகல பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் இரண்டு குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்ததுடன் வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றி வீழ்ந்த மரக் கிளைகளை வெட்டி ஆகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இப் பணிகளானது கிடைத்த தகவலுக்கமைய பாதிக்கப்பட்ட இடத்துக்கு வருகை தந்த படையினர் சேதமடைந்த வீடுகளின் இடிப்பாடுகளில் காயங்களுடன் சிக்கி இருந்த சிறுமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அத்துடன் ஒரே நேரத்தில் விழுந்த மரங்கள் அனைத்தையும் அகற்றி சேதமடைந்த கூரைகளையும் சுவர்களையும் சரிசெய்து, அந்த இரண்டு வீடுகளிலும் வசிப்பவர்களுக்கு வசதிகளை செய்துகொடுத்தனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த அவசரத் தேவையை கருத்திற்கொண்ட 581 ஆவது பிரிகேட் தளபதி கேணல் சுமால் ஹேமரத்ன அவர்கள் படையினருக்கு விடுத்த அறிவுறுத்தலின் பேரின் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. buy footwear | nike air force 1 shadow , eBay