Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2020 10:41:11 Hours

மேலும் 127 உள்நாட்டு தொடர்பாளர்கள் இனங்காணல்

இன்று காலை (15) அறிக்கையின்படி 132 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 05 பேர் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள். அவர்களில் 127 பேர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (15) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1723 ஆகும். அதில் 1,041 பேர் தொழில்சாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய 682 பேர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புபட்டவர்களாவர்.

இன்று காலை, தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் மூலம் வருகை தந்த 34 பயணிகள் அனைவரும் பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பிறகு முப்படையினரால் நிர்வகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட 254 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இன்றைய தினம் (15) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் ருவல கல்பிட்டிய தனிமைப்படுத்தல் மையத்தில் (01), சம்பூர் தனிமைப்படுத்தல் மையத்தில் (12), மற்றும் விடத்தபலை தனிமைபடுத்தல் மையத்தில் (117), ராஜகிரிய ஆயுர்வேத தனிமைபடுத்தல் மையத்தில் (19), பிட்டிபன தனிமைபடுத்தல் மையத்தில் (07), கிளப் பாம் மாரவில தனிமைபடுத்தல் மையத்தில் (90), ஹோட்டல் ஜெட்வின் தனிமைபடுத்தல் மையம் (09), ஆகிய தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.

அதேபோல், 15 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 52,612 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (15) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 88 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,703 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (14) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 9974 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 348,909.ஆகும்.

பூரணமாக குணமடைந்த 29 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (15) காலை 6.00 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.(நிறைவு) latest Running Sneakers | Women's Sneakers