14th October 2020 06:17:30 Hours
இலங்கை இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி ஓய்வுபெற்று பெற்றுசெல்லும் சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரியும் முன்னாள் 51 ஆவது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் லலித் ரத்னாயக்க அவர்களின் சேவையை பாராட்டி 2020 ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி படைத் தலைமையகத்தில் கௌரவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க அவர்கள் இலங்கை இராணுவத்திற்கு ஏராளமான கட்டளை நியமனங்கள் மற்றும் பணிநிலை நியமனங்களில் சேவையாற்றியுள்ளார். பிரதம அதிதியாக வருகை தந்த ஓய்வுபெற்று செல்லும் அதிகாரிக்கு படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இலங்கை சிங்க படையணியின் நாட்டிற்காக உயிர் நீத்த படையினர்களின் நினைவுச் தூபியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினரால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்றைய நிகழ்வில் ஆணைச்சீட்டு அதிகாரி மற்றும் சார்ஜன்ட் உணவகத்தில் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்தபசாரமும் மற்றும் அதிகாரிகளின் உணவகத்தில் சம்பிரதாய புகைப்படமும் எடுக்கப்பட்டது.
ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க அவர்களுக்கான விசேட விருந்துபசாரத்தில் அவரது துணைவி திருமதி துஷாரி மஞ்சுலா ரத்நாயக்க, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவிகள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது.
மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க மற்றும் அவரது துணைவியார் வளாகத்திற்கு வந்தபோது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 12வது படைப்பிரிவின் தளபதி மற்றும் சிங்கப் படையின் சேவை வனிதையர் பிரிவுத் தலைவி திருமதி ஷிரோமி பண்டார ஆகியோர் வரவேற்றனர்.Adidas footwear | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat