14th October 2020 05:40:30 Hours
இராணுவத்தினரிடையே புத்துயிர் பெற்றதும் மற்றும் பிரபலப்படுத்தப்பட்டதுமான இலங்கை தற்காப்புக் கலையான 'அங்கம்பொர,' பற்றிய அறிவுவானது செப்டம்பர் 26 ஆம் திகதி பனகொடையில் உள்ள 'அங்கம்பொர ஹெல சடன்' பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இராணுவ அங்கம்பொர குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜயந்த கொடிதுவக்கு அவர்களினால் இதற்கான முயற்சியானது எடுக்கப்பட்டது.
படையினரிடையே உடல் வலிமை, சகிப்புத்தன்மை, தைரியம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிமித்தம் குறித்த பண்டைய தற்காப்பு நுட்பத்தின் அனைத்து உள்நாட்டு வகைகளையும் கருத்தில் கொண்டு இராணுவத்தில் உள்ள அனைத்து 'அங்கம்பொர” பயிற்சியாளர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்த முதல் பட்டறை இதுவாகும். Sports News | Nike Running