14th October 2020 10:37:02 Hours
இன்று காலை (14) அறிக்கையின்படி 194 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (14) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1591 ஆகும். அதில் 1036 பேர் தொழில்சாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய 555 பேர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புபட்டவர்களாவர்.
தனிமைப்படுத்தப்பட்ட 379 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இன்றைய தினம் (14) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் பெரியகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் (101), பூனானி தனிமைப்படுத்தல் மையத்தில் (227),மற்றும் ஹோட்டல் ஜெட்விங் புளூ தனிமைபடுத்தல் மையத்தில் (51) ஆகிய தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.
அதேபோல், 14 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 52,090 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (13) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 84 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,905 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (13) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 6190 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 342,343 ஆகும்.
பூரணமாக குணமடைந்த 11 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (14)காலை 6.00 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர் . latest Running | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD