11th October 2020 09:50:10 Hours
புத்தல இராணுவ அதிகாரி தொழில் வாண்மை மேம்பாட்டு நிலையத்தின் படை கட்டளை அதிகாரி பாடநெறி எண் 7, கனிஸ்ட கட்டளை பாடநெறி எண் 19 மற்றும் களிஸ்ட பணிநிலை பாடநெறி எண் 19 ஆகியவற்றில் இலங்கை சமிஞ்சை படை அதிகாரிகள் மூவர் தகுதிக்கு ஏற்ப முதல் இடங்களைப் பெற்றுள்ளனர். இலங்கை இராணுவக் பாடநெறிகளில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரே படையை சேர்ந்த மூவர் இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.
இலங்கை சமிஞ்சை படை மேஜர் டபிள்யூ.பி.டி.என் அபேரத்ன, இலங்கை சமிஞ்சை படை மேஜர் டி.எஸ்.என்.கே பீரிஸ் மற்றும் இலங்கை சமிஞ்சை படை கேப்டன் டி.கே.ராமசிங்க ஆகியோர் புத்தல இராணுவ அதிகாரி தொழில் வாண்மை மேம்பாட்டு நிலையத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் பட்டமளிப்பு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இராணுவ அதிகாரி தொழில் வாண்மை மேம்பாட்டு நிலையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெயநாத் ஜெயவீர இந் நிகழ்வின் பிரதம கரந்துக் கொண்டார். பட்டமளிப்பு , சாதனை சான்றிதழ்கள் மற்றும் விருது வழங்கல் விழாவில் இராணுவ அதிகாரி தொழில் வாண்மை மேம்பாட்டு நிலையத்தின் பிரதி தளபதி, பிரதம பயிற்றுனர், சிரேஸ்ட பயிற்றுனர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் கலந்து கொண்டனர். Nike sneakers | Womens Shoes Footwear & Shoes Online