13th October 2020 11:09:27 Hours
இன்று காலை (13) அறிக்கையின்படி 92பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் துருக்கியை சேரந்த இரண்டு பேர் சீதுவை வெரன்ட தனிமைபடுத்தல் மையத்திலும் ஏனைய 90 பேர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.
இன்று (13) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1397ஆகும்.
மேலும் அபுதாபியில் இருந்து EY 264 விமானம் மூலம் 08பயணிகள் ,தோஹா கட்டாரில் இருந்து QR 688 விமானம் மூலம் 48 பயணிகள் , இந்தியாவில் இருந்து 6E 9034விமானம் மூலம் 05 பயணிகள் இன்று (13) காலை இலங்கை வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைபடுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (13) தனிமைப்படுத்தப்பட்ட 547நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் ஹோட்டல் ஜெட்விங் புளூ தனிமைபடுத்தல் மையத்தில்(04),ஹோட்டல் ஜெட்விங் பீச் தனிமைபடுத்தல் மையத்தில் (55), கல்கிஸ்ஸைதனிமைபடுத்தல் மையத்தில் (02), ஹோட்டல் டொல்பின் தனிமைபடுத்தல் மையத்தில் (54), ராஜகிரிய தனிமைபடுத்தல் மையத்தில் (05),சீகிரிய தனிமைபடுத்தல் மையத்தில்(116),சன்சைன் ரீசோட் தனிமை படுத்தல் மையத்தில்(52), பெந்தோட்டை எகோ-சேப் ஹோட்டல்தனிமைபடுத்தல் மையத்தில்(110),ஹோட்டல் அவானி பெந்தோட்டை தனிமைபடுத்தல் மையத்தில்(134), நிபுன பூச தனிமைபடுத்தல் மையத்தில்(11)கல்பிட்டி ருவல ஹோட்டல் தனிமைபடுத்தல் மையத்தில்(04),ஆகிய தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.
அதேபோல், 13ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 51480 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (13) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 90தனிமைப்படுத்தல் மையங்களில் 10,281 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (12) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை6648 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 335,752ஆகும்.
பூரணமாக குணமடைந்த 10 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (13)காலை 6.00 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர் . Nike shoes | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp