11th October 2020 12:12:13 Hours
இராணுவத் தளபதியின் துரு மிதுரு நவ ரட்டக் எனும் விவசாயம் மற்றும் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் நாடு முழுவதுமான இராணுவ பண்ணைகளில் அறுவடை செய்த அரிசியினை படையினரின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தை ஒட்டியுள்ள மற்றும் இராணுவ பண்ணைகள் ஆகிய நெல் வயல்களில் பூச்சிக்கொல்லிகள் , குறைந்த இரசாயன பொருட்களின் பயன்பாட்டில் இயற்கையாக மகா - 2019 மற்றும் யால - 2020 அறுவடைக் காலங்களின் உள்ளூர் நெல் வகைகளான சுவாந்தெல் , களுஹீக் ஹெட்டி என்பன பயிரிடப்பட்டன.
இராணுவ பண்ணைகளில் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் நச்சு இரசாயனங்கள் அற்ற அரிசி அவை கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகம், பனகொடை இராணுவ முகாம், இராணுவ சேவை வனிதையர் நலன்புரி கடைகளான கெந்தலந்த, மெனிங் டவுன், ருக்மல்கம, பனலுவ, ஜாவத்தை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் நிலையங்களில் விற்பனைக்கு வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை (9) ஆம் திகதி இராணுவ தினத்தை முன்னிட்டு, விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திரஜித் கந்தனஆராச்சி அவர்களால் இராணுவம் பயிரிட்ட அரிசியை இராணுவ சேவை வனிதையர் பிரிவுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தார். இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுஜீவா நெல்சனின் மேற்பார்வையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு நடத்தும் இராணுவ நலன்புரி கடைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவு நலன்புரி கடைகளில் மானிய விலையில் இராணுவ படையினருக்கு விற்பனை செய்வதற்காக கந்தக்காடு 6 (தொண்டர்) இலங்கை இராணுவ பொது சேவைப் படை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் நிஷாந்த முத்தாந்திரிகே விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் கர்ணல் சுமேத பாலசூரிய மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு கர்ணல் அருண விஜயகோன் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை (9) கையளித்தார். Running sports | Nike Releases, Launch Links & Raffles