Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2020 11:05:24 Hours

சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்டகள் இராணுவ தினக் கொண்டாட்டத்தில்.

கொவிட் 19 மீண்டும் எழுந்ததன் காரணமாக 71 ஆவது இராணுவத் தினம் 2020 அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பாதுகாப்புப் படை தலைமையகங்களில் அனைத்து முகாம்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்களால் இராணுவக் கொடி, ஏற்றப்பட்டு இராணுவ கீதம் பாடப்பட்டதன் பின்னர் உயிர் நீத்த போர் வீரர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பணி நிலை அதிகாரி II (நிர்வாகம்) அவர்கள் இராணுவத் தளபதியின் இராணுவத் தின செய்தியினை வாசித்தார்.

நிகழ்வில் பிரிகேடியர் பொதுப் பணி, அதிகாரிகள், படையினர் மற்றும் வன்னி தலைமையகத்திற்கு சேவை செய்யும் சிவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையில் 52வது படைப்பிரிவின் 521வது பிரிகேட் மற்றும் 11 விஜயபாகு காலாட் படையினர் (வி.ஐ.ஆர்) இராணுவ தினத்தன்று யாழ்ப்பாணம் புத்தூர் புனித லூகஸ் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கினர். 52 வது படைப்பிரிவின் வழிகாட்டுதலின் பேரில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார வழிகாட்டுதல்களின் படி 52வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கித்சிரி லியனகே, 521வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கிருஷாந்த பீரிஸ், 11 வது விஜயபாகு காலாட் படையின் கட்டளை அதிகாரி மேஜர் கீத் முனகமகே, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர்.

இதேபோல் போயகனை விஜயபாகு காலாட்படை தலைமையகத்தில் கொவிட் -19 தடுப்பு சுகாதார நடவடிக்கைகளையும் கடைப்பிடித்து படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டியவின் வழிகாட்டுதலின் கீழ் 71 வது இராணுவ தினம் கொண்டாடப்பட்டது.

விஜயபாகு காலாட்படை நிலையத் தளபதி இராணுவக் கொடியை ஏற்றியதனை தொடர்ந்து இராணுவப் கீதம் இசைத்து தேசபக்தி உணர்வுகளைச் சேர்ப்பதன் மூலம் அன்றைய நிகழ்வுகள் தொடங்கின.

தொடர்ந்து தாய்நாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த படையினரை நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவத் தளபதியின் இராணுவ தினச் செய்தி வாசிக்கப்பட்டது.

71 ஆவது இராணுவ தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதியினால் நிலை உயர்த்தப்பட்ட படை பிரதித் தளபதி பணிநிலை அதிகாரி I, (படைவீரர் விவகாரங்கள்) மற்றும் பணிநிலை அதிகாரி III (கணக்காய்வு) ஆகியோருக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதே நேரத்தில் சிப்பாய்களின் பதவி உயர்வு குறிகள் நிலையத் தளபதி, பிரதி நிலையத் தளபதி, பணிநிலை அதிகாரிகள் I முறையே இராணுவ நாளில் பதவி உயர்வு பெற்றவர்களில் ஆணைச்சீட்டு அதிகாரி I - 8, ஆணைச்சீட்டு அதிகாரி II - 69, பணிநிலை சார்ஜென்ட் - 37, சார்ஜென்ட் - 300, கோப்ரல் - 395 மற்றும் லான்ஸ் கோப்ரல் – 667 என மொத்தம் 1476 பேருக்கு பதவி குறி அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் நிலையத் தளபதி, பிரதி நிலையத் தளபதி, பணிநிலை அதிகாரிகள், ரெஜிமென்ட் சார்ஜென்ட் மேஜர் , படையினர், மற்றும் சிவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாவின் வழிகாட்டுதலின் கீழ் 71 வது இராணுவ ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

அன்றைய நிகழ்வின் சிறப்பம்சமாக இராணுவக் வளாகத்தின் செனுர உயானவில் 2000 மாங்கன்றுகள் மற்றும் பலா மரக்கன்றுகளை நடப்பட்டது.

யாழ் தளபதி முதல் மரக்கன்றினை பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினருடன் சேர்ந்து நாட்டி வைத்தார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக இராணுவ தினம் (10) படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

கொடி ஏற்றுதல், படையினருக்கு தளபதியின் இராணுவச் செய்தி வாசித்தல் மரம் நடுகை தினத்தை அழங்கரித்தன.

பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் பியால் நானக்காரவாசம், பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் சுகத் ரத்நாயக்க, பிரிகேடியர் நிஹால் சமரவிக்ரம, பிரிகேடியர் ஒருங்கிணைப்பு (தொண்டர் விவகாரம், அதிகாரிகள் மற்றும் படையினர் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையகம் இராணுவ தினத்தை (10) கொஸ்கம தலைமையகத்தில் கொண்டாடியது

இராணுவ வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த மடோலா அவர்களால் மரக்கன்று நாட்டப்பட்டது.

அதேபோல், முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 59வது படைப்பிரிவின் 591வது பிரிகேட்டின் 24 வது இலங்கை சிங்க படை இராணுவ தினத்தை முன்னிட்டு (10) சிலாவத்தை லதானி சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை (9).சிறப்பு மதிய உணவு விருந்தை வழங்கினர். முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க மற்றும் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மொத்தம் 20 சிறுவர்களுக்கு இந்த உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றும் 24 வது சிங்கப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர். ரோட்ரிகோ மற்றும் அவரது படைகள் இந்த நிகழ்வில் இணைந்தன. spy offers | Air Jordan 5 Raging Bull Toro Bravo 2021 DD0587-600 Release Date - SBD