Header

Sri Lanka Army

Defender of the Nation

10th October 2020 06:15:48 Hours

உள்நாட்டில் மேலும் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகரிப்பு

இன்று காலை (12) அறிக்கையின்படி 124 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், மூன்று பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் (ஓமானில் இருந்து வருகை தந்து சன்கிரீன் ஹபரன தனிமைபடுத்தல் மையத்தில் ஒருவரும் குவைட்டில் இருந்து வருகை தந்து நுரைச்சோலை மற்றும் பசரை தனிமைபடுத்தல் மையங்களில் இருவரும்) மற்றும் ஏனைய 121 நபர்கள் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் என கொவிட் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (12) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1307 ஆகும்.

மேலும் தோஹாவில் இருந்து QR 668 விமானம் மூலம் 02 நபர்கள் இன்று (12) காலை இலங்கை வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைபடுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (12) தனிமைப்படுத்தப்பட்ட 112 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் நுரைச்சோலை தனிமைபடுத்தல் மையத்தில் (28), அமாய பீச் தனிமைபடுத்தல் மையத்தில் (05), ஜெட்விங் புளூ தனிமைபடுத்தல் மையத்தில் (01),ஹோட்டல் ஜெட்விங் புளூ தனிமைபடுத்தல் மையத்தில்(01), பிகோன் பீச் தனிமைபடுத்தல் மையத்தில்(04),மற்றும் பியகம விலேஜ் தனிமைபடுத்தல் மையத்தில்(12), ஹொட்டல் டொல்பின் தனிமைபடுத்தல் மையத்தில் (31), ராஜகிரிய தனிமைபடுத்தல் மையத்தில் (17), நிபூன பூஸ்ஸ தனிமைபடுத்தல் மையத்தில் (10) பேர் மற்றும் ஹபரதுடுவ பொலிஸ் தனிமைபடுத்தல் மையத்தில் (07) பேர் தனிமைபடுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களாவர்.

12 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 51,004 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (12) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 93 தனிமைப்படுத்தல் மையங்களில் 10,447 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (11) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3468 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 331,972 ஆகும்.

பூரணமாக குணமடைந்த ஒரு கொவிட்- 19 தொற்றாளர் இன்று (12 )காலை 6.00 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டவர் ஆவர். affiliate tracking url | Men's Footwear