11th October 2020 09:45:10 Hours
ஞாயிற்றுக்கிழமை காலை (11) ஆம் திகதி 'கொரோனாவட எரேஹிவ யலி நெகிடிமு' (கொரோனாவுக்கு எதிராக மீண்டும் எழுந்திருப்போம்), கலந்துரையானது ஐ.டி.என் மற்றும் ரூபவஹினியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது மற்றும் ஒரே நேரத்தில் எஸ்.எல்.பி.சி. மற்றும் லக்ஹண்ட வானொலி அலைவரிசையிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டன. குறித்த இக் கலந்துரையாடலில் கெளரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புத் தலைமைப் பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதாத் சமரவீர ,பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன ஆகிய குழுவினர் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றின் மீள் எழுச்சி, பரிமாற்றத்தின் நிலை, தடுப்பு சுகாதார நடைமுறைகளின் தேவை மற்றும் கொவிட் தொற்று நோயாளிகளின் அதிகரிப்பை எவ்வாறு குறைப்பது போன்ற முன்னோக்குகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விரிவான விவரங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் ஆழமாக விவாதிக்கப்பட்டன.
நிகழ்வின் முழு வீடியோ காட்சிகளையும் இங்கே காணலாம்: Sport media | シューズ