Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2020 08:17:31 Hours

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தினால் இராணுவத்தினருக்கு பிஸ்கட் பெட்டிகள் வழங்கி வைப்பு

நாட்டில் நிழவும் கொவிட்-19 நோய் பரவல் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் இராணுவத்தினரை பாராட்டும் முகமாக, வரையறுக்கப்பட்ட சிலோன் பிஸ்கட் நிறுவனத்தினர் (சிபிஎல்), பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்து தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுக் கடமைகளில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களிடையே விநியோகிப்பதற்காக பிஸ்கட் பெட்டிகளை இன்று பிற்பகல் (11) ஆம் திகதி அன்பளிப்பு செய்தனர்.

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று நிர்வாக அதிகாரி திரு நலின் கருணாரத்ன, சிபிஎல், சிரேஷ்ட தர முகாமையாளர் திரு மகேஷ் அனுருத்த, சந்தைப்படுத்தல் முகாமையாளர் திரு ரொமேஷ் ஜயதிலக, சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் திரு ஜன்மேஷ் போல் அந்தோணி மற்றும் ஒரு சில அதிகாரிகள் இணைந்து ஒரு தெகுதி பிஸ்கட்டினை இராணுவத் தளபதியிட் கையளித்தனர். பதிலுக்கு இராணுவத் தளபதி சிலோன் பிஸ்கட் நிறுவனத்தினரின் சிந்தனை மற்றும் இராணுவத்தினை பாராட்டியதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

குறித்த நன்கொடையானது ‘பௌத்ய தொலைக்காட்சி’ யினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தினரின் அதிகாரிகள் மற்றும் இராணுவ தலைமையகத்தின் நலன்புரி பணிப்பாளர் பிரிகேடியர் சனத் ஆலுவிஹாரே ஆகியோர் கலந்து கொண்டனர். Adidas shoes | Air Jordan